Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்





நண்பர்கள் அனைவருக்கும் இனிவரும் புத்தான்டு




2009 நல்ல எதிர்காலமாக அமைய வாழ்த்துக்களும்



நன்றிகளும்.




பசுமை காப்போம் இந்த புத்தாண்டில் ...

சுதந்திர போராட்ட களம்

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

1. Zamzar – உங்களது அலைபேசியில் (cell phone) நீங்கள் பதிந்த காணொளிகள் 3GP வடிவில் இருந்தால், அதை நீங்கள் Windows Media Playerல் காண இயலாது. உங்கள் மேலதிகாரி கொடுத்த கோப்பு ஆபீஸ்2007ல் செய்யப்பட்டது. ஆனால் உங்களிடம் அது இல்லை. இந்த நேரங்களில் உங்களுக்குத் தேவை இது.Zamzar என்பது ஒரு நேரடி Online சேவை : அங்கே படங்கள், காணொளிகள்,ஒலிக்கோப்புகள்,டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றை ஒரு வடிவில் இருந்து அடுத்த வடிவுக்கு (format conversion) மாற்றிக்கொள்ளலாம். அதுவும் எந்த மென்பொருளையும் நிறுவாமல்.

2. Live Mesh நம் நண்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்துவார்கள் எனில் அவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை(Files) Mesh உடன் பகிர்ந்துவிட்டு அதை வேறு ஒரு கணினியின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.இது தொலைதூரக் கணினி பகிர்தலில் (Remote computer sharing) ஒரு சாதனையே செய்திருக்கிறது.

3. InstaCalc - எக்கச்சக்கமான கணிப்பான்களையும்(Calculator), Spreadsheetகளையும் ஒருங்கிணைத்து Windows Calculatorஐ விடப் பல மடங்கு சிறப்பாக விளங்குகிறது.

4. Animoto – Slide show பார்த்துப் பார்த்து வெறுத்துப் போனவர்களுக்காக படங்களை Videoக்களாக நல்ல உயர்தரத்தில் உருவாக்குவதற்கு.

5. Meebo – உங்கள் நண்பர்கள் பல்வேறு அரட்டை அரங்கங்களில் (Internet relay chat) இயங்கி வந்தாலும், அவர்கள் அனைவருடனும் நீங்கள் ஓரிடத்தில் இருந்தபடியே கதைக்க உதவுகிறது. எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமல் (install) இதை இயக்கலாம்.

6. Ping.fm - வலைப்பூக்கள், சமூகக் குழுமங்கள்(social networks) ஆகியவற்றுடன் குழுமக் குறுஞ்செய்தி(group sms) அனுப்ப இன்னும் பல சேவைகளைச் செய்ய

7. Photoshop.com – அடோபி Photoshopன் இலவசமான குறுவடிவம் இது. எந்த மென்பொருளையும் நிறுவத் தேவையில்லாத சேவை. 2ஜிபி நினைவகம் (memory) இலவசம். Windows அலைபேசிகளில் பயன்படுத்தும் விதமாகவும் உள்ளது.

8. Skydrive – கோப்புப் பகிர்வான் தளங்களில் (File sharing sites) சமீபத்திய சாதனையாக இது திகழ்கிறது. கோப்புகள், படங்கள், காணொளிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர்வதற்கு. 25 ஜிபி இலவசம் : இது இப்போது வரம்பில்லாத ஜிபிக்களை அள்ளி வழங்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

9. Sumo Paint - புதிய படங்களை ஆரம்பத்திலிருந்து உருவாக்க உதவும் (start from scratch) அருமையான பயன்பாடு.

10. RescueTime - கணினியில், இணையத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் இணைந்திருக்கிறீர்கள் - எவ்வளவு நேரம் செலவு செய்திருக்கிறீர்கள் என்பதைத் தானியங்கித் தனமாகக் கண்காணிக்க

11. Screen Toaster - கணினித் திரை நடவடிக்களைப் படமாகப் பிடிக்க (screen capture). நல்ல உயர்தரத்தில் பதிவு செய்கிறது. தானியங்கியாக உங்கள் திரை நடவடிக்கைகளை இணையேற்றிவிடும் ஒரு சிறு Stop Button ஐ அழுத்தி முடித்தவுடன்.

12. Truveo – AOL வழங்கும் ஒரு சேவை இது. காணொளிகளுக்கான ஒரு தேடுபொறி (search engine). பல்வேறு காணொளித் தளங்களில் இருந்து வீடியோக்களைத் தேடி ஓரிடத்தில் பகிர்கிறது.

13. Iterasi– இணையப் பக்கங்கள் (pages) அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகின்றன. உங்கள் மனம் கவர்ந்த தளங்களின் பக்கங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காணாமலோ / காலாவதியாகியோ(expire) விடலாம். ஒரே Clickல் இணையப் பக்கங்களைக் Copy செய்ய உதவுகிறது. உங்கள் மனம் கவர்ந்த இணையத்தளமே (Favorite site) செயலிழந்துவிட்டாலும் அதில் இருந்த தகவல்களை உங்கள் கணினி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலும்.

14. Spypig – நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை உங்கள் நண்பர் எப்போது எத்தனை மணிக்குத் திறந்து பார்த்தார் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். Yahoo, Gmail, Thunderbird, Outlook போன்றவற்றுடன் ஒத்திசைவு (Compatible) கொண்டது.

15. Wakoopa – முதியவர்கள், குழந்தைகள், வீட்டு விலங்குகள், பெண்களுக்கான சமூகக் குழுமங்களைப் போன்றது இது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால்,இது ஒரு மென்பொருட்களுக்கான சமூகக் குழுமம். இணையச் சேவைகள், இணையப் பயன்பாடுகள், மென்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்கள் மற்றும் அவற்றிற்கான மாற்றுகள் ஆகியவற்றையும் தெரிவிக்கிறது.

Software Collection 2008 - ஓசி & ஒசத்தி

Cnet நிறுவனம் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறது. இதெல்லாம் சீப் & பெஸ்ட் இல்லமா.. ஓசி & ஒசத்தி... :)நம் கணினிக்கு அவசியம் தேவையானவை. கணினி பாதுகாப்புக்கென பட்டியலிடப் பட்டிருப்பவை தவறவிடக் கூடாத மென்பொருட்கள்.எச்சரிக்கை : கீழே இருப்பவை விண்டோஸ் இயங்குதளத்திற்கு மட்டுமே.
Windows Starter Kit Web Browsers
Mozilla Firefox
Opera
Google ChromeE-mail clients
Mozilla ThunderbirdOffice and Productivity
OpenOffice.org (Windows)
AbiWord
Foxit Reader
PrimoPDFImage Editors
GIMP
Paint.NET
Gadwin PrintScreenMusic Jukeboxes
MediaMonkey StandardVideo Jukeboxes and Playback
Miro
The KMPlayer
VLC Media PlayerFile Compression
7-Zip
IZArcChat
Pidgin
ooVooTorrent
uTorrentUtilities
Smart Defrag
Process Explorer
WinDirStat
NoteTab Light
Launchy
CCleaner
Belarc Advisor
Security Starter Kit
Firewall
Comodo Firewall ProAntivirus
Avira AntiVir Personal - Free Antivirus
AVG Anti-Virus Free EditionSecurity removal
Malwarebytes' Anti-MalwareSurf adviser
McAfee SiteAdvisor for FirefoxParental control
KidZui
K9 Web ProtectionEncryption
TrueCrypt

Wednesday, December 10, 2008

ஞான சூன்யம்

அந்த ஊரின் மிக உயரிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் அவர். ஊரின் ஜென்குரு ஒருவரை சந்தித்தார். பேராசிரியர் ஞானம் குறித்து பேசத் துவங்கினார். நிறைய விடயங்கள் ஞானம் மற்றும் முக்தி குறித்து விளக்கலானார். குருவோ அமைதியாக காலியாக இருந்த பேராசிரியரின் தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்ப ஆரம்பித்தார். அவர் தேநீரை ஊற்ற ஊற்ற பேராசிரியர் விடாது பேசியபடி இருந்தார். குருவோ முழுவதுமாக நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தார் . அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசியரோ பொறுமையிழந்து '' சாமி என்ன செயறீங்க , அந்த கோப்பை ரொம்பிருச்சு , இதுக்கு மேல ஊத்தாதீங்க '' என்றார் .
குருவோ புன்னகைத்தபடி

'' நீ இந்த கோப்பையை போன்றவன் ''
''உன் கோப்பையை நீ காலியாக்காமல் அதில் எப்படி ஞானத்தை நிரப்புவது ''
(empty your cup என்னும் ஜென் கதையிலிருந்து )

தேங்க்ஸ் அதிஷா - இந்த அருமையான கதைக்கு ..(http://www.athishaonline.com)

Thursday, December 4, 2008

தொலையும் ஆசைகள்



சுகமான மேத்தையில் உறங்கியும்
ஏனோ தூக்கம் இல்லை .
அம்மா ....
உன்மடி தேடியும் கிடைக்கவில்லை...
ஏனோ ! இன்றும் அக்ரமித்துவித்தது அந்த மடிகணினி ...

புஜங்காசனம் - யோகா


அங்கிலேயர் பதுங்கி தாக்குதல் நடத்திய மரம்


படித்ததில் பிடித்தது ..

ஆனந்தின் பேட்டி. செஸ் காய்களில் உங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு அவரின் பதில். " சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்துக் கொண்டே இருப்பார். பிஷப் ராஜாவைக் காப்பாற்ற வியூகங்களை வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால் சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். நான் என்னை சிப்பாயாக நினைத்துக் கொள்வதாலே என் ராஜாவைக் காப்பாற்ற முடிந்தது. ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்"

---- நீங்க எப்பவும் ராஜாதாங்க‌ -----

Thursday, November 20, 2008

ப்ஹீமா - ஒரு அழகிய பாட்டு ...

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

..>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>>

சரணம் 1 :

>> இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.

> இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

>> உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..

> கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

>> சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.

>

----------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> சரணம் 2 :

>> மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..

> இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.

>> இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

> நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

>> உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

------------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

>ஒ...

Monday, November 10, 2008

அழகே நீ மதுரையா ???

வைகை அறு



திருபரம்குன்றம்



அழகர் கோவில்



காந்தி மண்டபம்



மதுரை இரவு நேரத்தில்



திருமலை நாயகர் மகால்


மீனாக்ஷி கோவில் கோபுர தரிசனம்



தெபகுளம்


Tamarai kulam in Meenakshi Temple

முதல் ரயில் ..


தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.

ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.

சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.

அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்

வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.

அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.


சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.


இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.


வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.

குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.

அதிகாரிகளே...
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.


மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.



சபாஷ் ராஜ்மோகன்.

அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.

விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.


குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ



பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?


என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..

காவிரிப்பிரச்னை
காவிரிப்ப்ரச்னை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு.



எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன்

Monday, October 13, 2008

கணிணியில் உள்ள ட்ரைவ்களை மறைய வைப்பது எப்படி

My Computer'-ஐ திறந்தால், உங்கள் கணிணியில் உள்ள எல்லா ட்ரைவ்களும்(A: , C: , D: ...) தெரியும். இவற்றுள் ஏதேனும் ஒரு ட்ரைவை மறைக்க என்ன வழி என பார்க்கலாம்.உதாரணமாக ப்ளாப்பி ட்ரைவ்.பெரும்பாலும் இன்றைய கணிணிகளில் ப்ளாப்பி ட்ரைவ் என்ற ஒன்று தேவையில்லாதாதாக ஆகி விட்டது.கணிணியில் இருந்து ப்ளாப்பி ட்ரைவை நீக்கிய பிறகும் "Folder View"ல் அதன் ஐகான் தெரியும்.நாம் தெரியாத்தனமாக அதை க்ளிக் செய்து விட்டால் கொஞ்ச நேரம் கழித்து " Please Insert Disk in A;\" என்று ஒரு செய்தி வந்து கடுப்பேற்றும்.ரெஜிஸ்ட்ரி மூலமாக இதை தடுக்க நீங்கள் செய்ய வேன்டியது...
எச்சரிக்கை: ரெஜிஸ்ட்ரியில் கை வைப்பது ஆபத்தானது. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் கணிணி செயலற்று போக வாய்ப்புகள் அதிகம். எனவே ரெஜிஸ்ட்ரியை backup எடுப்பது, மற்றும் Restore செய்வது எப்படி என்பதை இங்கே சென்று தெரிந்து கொள்ளவும்.
1.Start->Run -ஐ க்ளிக் செய்து regedit என டைப் செய்யவும்.உங்கள் கணினியின் ரெஜிஸ்ட்ரி திறந்து கொள்ளும்.
2. இதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer என்ற பாதைக்கு செல்லவும்
3. வலது பக்க விண்டோவில் right click செய்து New->BinaryValue என செலக்ட் செய்யவும்."New Value #1" என்ற புதிய Value ஒன்று உருவாகும்.

4. அதற்கு NoDrives என பெயரிட்டு, பின் அதை டபுள் க்ளிக் செய்து "01 00 00 00" value தரவும்.
இப்போது உங்கள் கணிணியை 'ReStart' செய்து, பின் 'MyComputer' ஐ திறந்து பார்த்தால் உங்கள் ப்ளாப்பி ட்ரைவ் ஐகான்(A:) மறைந்து விட்டதை உணரலாம்.
கணிணியை Restart செய்யாமல் இந்த மாற்றத்தை நாம் தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. TaskManager சென்று Process Tab ஐ க்ளிக்கவும். 'explorer.exe' ஐ Right CLick-->EndProcess செய்யவும். மீண்டும் அதை கொண்டு வர TaskManager ல் File Menu ->New Task சென்று explrer.exe என டைப் செய்து ஓகே தரவும். இப்போது 'MyComputer' ஐ பார்த்தால் ப்ளாப்பி ட்ரைவ் ஐகான் (A:) மறைந்து விட்டதை உணரலாம்.

Tuesday, October 7, 2008

பிற மொழிப்பெயர்கள் வஸ் தமிழ்ப் பெயர்கள்

வ.எண் - பிற மொழிப்பெயர்கள் - தமிழ்ப் பெயர்கள்

---------- ------------------------------------- -------------------------
1 - டிரேடரஸ் - வணிக மையம்
2 - கார்ப்பரேஷன் - நிறுவனம்
3 - ஏஜென்சி - முகவாண்மை
4 - சென்டர் - மையம், நிலையம்
5 - எம்போரியம் - விற்பனையகம்
6 - ஸ்டோரஸ் -பண்டகசாலை
7 - ஷாப் - கடை,அங்காடி
8 - அண்கோ -குழுமம்
9 - ஷோரூம் -காட்சியகம், எழிலங்காடி
10 - ஜெனரல் -ஸ்டோரஸ் பல்பொருள் அங்காடி
11 - டிராவல் -ஏஜென்சி சுற்றுலா முகவாண்மையகம்
12 - டிராவலஸ்- போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 - எலக்டிரிகலஸ் -மின்பொருள் பண்டகசாலை
14 - ரிப்பேரிங் சென்டர் -சீர்செய் நிலையம்
15 - ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை
16 - ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்
17 - டிம்பரஸ் - மரக்கடை
18 - பிரிண்டரஸ் - அச்சகம்
19 - பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்
20 - ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21 - லித்தோஸ் - வண்ண அச்சகம்
22 - கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 - ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்
24 - காபி பார் - குளம்பிக் கடை
25 - ஹோட்டல் - உணவகம்
26 - டெய்லரஸ் - தையலகம்
27 - டெக்ஸ்டைலஸ்- துணியகம்
28 - ரெடிமேடஸ்- ஆயத்த ஆடையகம்
29 - சினிமா தியேட்டர் - திரையகம்
30 - வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 - போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 - சிட் பண்ட் - நிதியகம்
33 - பேங்க் - வைப்பகம்
34 - லாண்டரி - வெளுப்பகம்
35 - டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்
36 - அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்
37 - அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38 - ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி
39 - ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்
40 - ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்
41 - ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்
42 - ஆட்டோ - தானி
43 - ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்
44 - ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45 - பேக்கரி - அடுமனை
46 - பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்
47 - பசார் - கடைத்தெரு, அங்காடி
48 - பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்
49 - பீடா ஸ்டால் மடி - வெற்றிலைக் கடை
50 - பெனிஃபிட் - பண்ட் நலநிதி
51 - போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி
52 - பாய்லர் - கொதிகலன்
53 - பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 - கேபிள் - கம்பிவடம், வடம்
55 - கேபஸ் - வாடகை வண்டி
56 - கபே - அருந்தகம், உணவகம்
57 - கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்
58 - கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை
59 - சிமெண்ட் - பைஞ்சுதை
60 - கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61 - சிட்ஃபண்ட் - சீட்டு நிதி
62 - கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 - கிளினிக் - மருத்துவ விடுதி
64 - காபி ஹவுஸ் - குளம்பியகம்
65 - கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 - கம்பெனி - குழுமம், நிறுவனம்
67 - காம்ப்ளகஸ் - வளாகம்
68 - கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்
69 - காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி
70 - கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்
71 - கூரியர் - துதஞ்சல்
72 - கட்பீஸ் சென்டர் - வெட்டுத் துணியகம்
73 - சைக்கிள் - மிதிவண்டி
74 - டிப்போ - கிடங்கு, பணிமனை
75 - டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்
76 - டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்
77 - எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்
78 - எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்
79 - எம்போரியம் - விற்பனையகம்
80 - எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81 - சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்
82 - பேக்டரி - தொழிலகம்
83 - பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்
84 - பாஸ்ட் புட் - விரை உணாவகம்
85 - பேகஸ் - தொலை எழுதி
86 - பைனானஸ் - நிதியகம்
87 - பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
88 - கார்மென்டஸ் - உடைவகை
89 - ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்
90 - ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91 - ஜூவல்லரி நகை - மாளிகை
92 - லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93 - லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி
94 - மார்க்கெட் - சந்தை அங்காடி
95 - நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
96 - பேஜர் - விளிப்பான், அகவி
97 - பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 - பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்
99 - பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு
100 - பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 - பெட்ரோல் - கன்னெய், எரிநெய்
102 - பார்மசி - மருந்தகம்
103 - போட்டோ ஸ்டூடியோ - ஒளிபட நிலையம்
104 - பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்
105 - பிளம்பர் - குழாய்ப் பணியாளர்
106 - பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை
107 - பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 - பவர்லும் - விசைத்தறி
109 - பவர் பிரஸ் - மின் அச்சகம்
110 - பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்
111 - ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்
112 - ரப்பர் - தொய்வை
113 - சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்
114 - ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்
115 - ஷோரூம் - காட்சிக்கூடம்
116 - சில்க் அவுஸ் - பட்டு மாளிகை
117 - சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்
118 - ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்
119 - சப்ளையரஸ் - வங்குநர்,
120 - ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்
121 - டிரேட் - வணிகம்
122 - டிரேடரஸ் - வணிகர்
123 - டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்
124 - டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125 - டீ ஸ்டால் - தேனீரகம்
126 - வீடியோ - வாரொளியம், காணொளி
127 - ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு
128 - ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்
129 -எக்ஸ்ரே
130 - ரெடிமேட் ஜுவெல்லரரி மார்ட்
ஊடுகதிர் ஆயத்த அணிகலன் அங்காடி

மனதில் உறுதி வேண்டும்

இண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில் ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும் அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும். எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள் தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல் தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை வேடிக்கை பார்ப்பார்களே.அன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.