Friday, January 2, 2009

படித்ததில் ரசித்தவை ...

குரங்கைப் பிடிக்கறவங்க எப்படிப் பிடிப்பாங்கன்னு தெரியுமா? சதுர வடிவிலான மரப்பெட்டியை குரங்குகள் வர்ற பகுதிகள்ல நிலத்துல, மரத்துல பதிச்சு வெச்சிருப்பாங்க. இழுத்தா எடுக்கமுடியாத மாதிரி. அதுல மேல்பகுதில குரங்கோட கை நுழையற அளவு ஒரு ஓட்டை இருக்கும். அதுக்குள்ள குரங்குகள் சாப்பிடற சில பழக்கொட்டைகள் இருக்கும்.அந்தப் பக்கமா வர்ற குரங்குகள் வாசனையால கவரப் பட்டு, அதுக்குள்ள கைவிட்டு நாலைஞ்சு கொட்டைகளை எடுத்து, கையை வெளில எடுக்க முயற்சி பண்ணும். வெறும் கை நுழையற அளவுதான் அந்த ஓட்டை இருக்கும். பழக்கொட்டைகள் கைல இருக்கறப்ப அந்தக் கை ஓட்டையை விட்டு வெளில வராது. அதை விட்டுட்டா வெளில கையை எடுத்துடலாம்ன்னு யோசனை இல்லாம அப்படியே தவிச்சிட்டிருக்கும். அப்போ வேடர்கள் சாவகாசமா வந்து குரங்கை சங்கிலியால கட்டி, அந்த மரப்பெட்டியை பேர்த்து எடுத்து, குரங்கைப் பிடிச்சுட்டு போய்டுவாங்களாம்!நாமளும் இப்படித்தான் சில விஷயங்கள்ல பிடிவாதமா இருந்து, அந்தப் பிடிவாதத்தை விட்டுட்டா ஜெயிக்கலாம்ன்னு தெரியாம தவிக்கறோம்.

- பரிசல் பதிவில் ரசித்தவை இதோ அவர் பதிவு இங்கே சொடுகவும் http://www.parisalkaaran.com/

*இந்தப் ஆண்டு எல்லாருக்கும், உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த ஆண்டாக வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு மஞ்சள் ஆண்டாக அறிவிகபட்டது ... சோ ...