Wednesday, December 10, 2008

ஞான சூன்யம்

அந்த ஊரின் மிக உயரிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் அவர். ஊரின் ஜென்குரு ஒருவரை சந்தித்தார். பேராசிரியர் ஞானம் குறித்து பேசத் துவங்கினார். நிறைய விடயங்கள் ஞானம் மற்றும் முக்தி குறித்து விளக்கலானார். குருவோ அமைதியாக காலியாக இருந்த பேராசிரியரின் தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்ப ஆரம்பித்தார். அவர் தேநீரை ஊற்ற ஊற்ற பேராசிரியர் விடாது பேசியபடி இருந்தார். குருவோ முழுவதுமாக நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தார் . அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசியரோ பொறுமையிழந்து '' சாமி என்ன செயறீங்க , அந்த கோப்பை ரொம்பிருச்சு , இதுக்கு மேல ஊத்தாதீங்க '' என்றார் .
குருவோ புன்னகைத்தபடி

'' நீ இந்த கோப்பையை போன்றவன் ''
''உன் கோப்பையை நீ காலியாக்காமல் அதில் எப்படி ஞானத்தை நிரப்புவது ''
(empty your cup என்னும் ஜென் கதையிலிருந்து )

தேங்க்ஸ் அதிஷா - இந்த அருமையான கதைக்கு ..(http://www.athishaonline.com)

No comments: