Tuesday, October 7, 2008

மனதில் உறுதி வேண்டும்

இண்டர்நெட் என்ற வார்த்தையை இணையம் என தமிழ்படுத்தியதாக முதலில் ஏதோ ஒரு வலையகத்தில் படித்தபோது சற்று வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அந்த வார்த்தையே நம்மிடையே ஒரு சாதாரண தமிழ் வார்த்தையாக ஒன்றிப்போனது. எல்லாம் எழுதும்போது மட்டும் தான். பேச்சு வழக்கில் இன்னும் அந்த வார்த்தையை உபயோகிக்க தைரியம் வரவில்லை. இது போலத்தான் ”கணிணி”யும். எழுதும் போது மட்டும் ”கணிணி” என எழுத தைரியம் வரும் நமக்கு பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தைதான் முந்துகிறது. சுத்த தமிழில் பேச தமிழ் வார்த்தைகள் தெரியவேண்டும் என்பதைவிட தைரியம் வேண்டும் என்பதுதான் உண்மைபோல் தோன்றுகிறது. என்ன செய்வது சுற்றி இருக்கும் தமிழர்கள் நாம் ”தமிழில்” பேசுவதை வேடிக்கை பார்ப்பார்களே.அன்பு நண்பர் V.Subramanian அவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய சில தமிழ்ப் பெயர்களின் தொகுப்பு கீழே. நன்றி அய்யா.






No comments: