Wednesday, December 31, 2008

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

1. Zamzar – உங்களது அலைபேசியில் (cell phone) நீங்கள் பதிந்த காணொளிகள் 3GP வடிவில் இருந்தால், அதை நீங்கள் Windows Media Playerல் காண இயலாது. உங்கள் மேலதிகாரி கொடுத்த கோப்பு ஆபீஸ்2007ல் செய்யப்பட்டது. ஆனால் உங்களிடம் அது இல்லை. இந்த நேரங்களில் உங்களுக்குத் தேவை இது.Zamzar என்பது ஒரு நேரடி Online சேவை : அங்கே படங்கள், காணொளிகள்,ஒலிக்கோப்புகள்,டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றை ஒரு வடிவில் இருந்து அடுத்த வடிவுக்கு (format conversion) மாற்றிக்கொள்ளலாம். அதுவும் எந்த மென்பொருளையும் நிறுவாமல்.

2. Live Mesh நம் நண்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்துவார்கள் எனில் அவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை(Files) Mesh உடன் பகிர்ந்துவிட்டு அதை வேறு ஒரு கணினியின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.இது தொலைதூரக் கணினி பகிர்தலில் (Remote computer sharing) ஒரு சாதனையே செய்திருக்கிறது.

3. InstaCalc - எக்கச்சக்கமான கணிப்பான்களையும்(Calculator), Spreadsheetகளையும் ஒருங்கிணைத்து Windows Calculatorஐ விடப் பல மடங்கு சிறப்பாக விளங்குகிறது.

4. Animoto – Slide show பார்த்துப் பார்த்து வெறுத்துப் போனவர்களுக்காக படங்களை Videoக்களாக நல்ல உயர்தரத்தில் உருவாக்குவதற்கு.

5. Meebo – உங்கள் நண்பர்கள் பல்வேறு அரட்டை அரங்கங்களில் (Internet relay chat) இயங்கி வந்தாலும், அவர்கள் அனைவருடனும் நீங்கள் ஓரிடத்தில் இருந்தபடியே கதைக்க உதவுகிறது. எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமல் (install) இதை இயக்கலாம்.

6. Ping.fm - வலைப்பூக்கள், சமூகக் குழுமங்கள்(social networks) ஆகியவற்றுடன் குழுமக் குறுஞ்செய்தி(group sms) அனுப்ப இன்னும் பல சேவைகளைச் செய்ய

7. Photoshop.com – அடோபி Photoshopன் இலவசமான குறுவடிவம் இது. எந்த மென்பொருளையும் நிறுவத் தேவையில்லாத சேவை. 2ஜிபி நினைவகம் (memory) இலவசம். Windows அலைபேசிகளில் பயன்படுத்தும் விதமாகவும் உள்ளது.

8. Skydrive – கோப்புப் பகிர்வான் தளங்களில் (File sharing sites) சமீபத்திய சாதனையாக இது திகழ்கிறது. கோப்புகள், படங்கள், காணொளிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர்வதற்கு. 25 ஜிபி இலவசம் : இது இப்போது வரம்பில்லாத ஜிபிக்களை அள்ளி வழங்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

9. Sumo Paint - புதிய படங்களை ஆரம்பத்திலிருந்து உருவாக்க உதவும் (start from scratch) அருமையான பயன்பாடு.

10. RescueTime - கணினியில், இணையத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் இணைந்திருக்கிறீர்கள் - எவ்வளவு நேரம் செலவு செய்திருக்கிறீர்கள் என்பதைத் தானியங்கித் தனமாகக் கண்காணிக்க

11. Screen Toaster - கணினித் திரை நடவடிக்களைப் படமாகப் பிடிக்க (screen capture). நல்ல உயர்தரத்தில் பதிவு செய்கிறது. தானியங்கியாக உங்கள் திரை நடவடிக்கைகளை இணையேற்றிவிடும் ஒரு சிறு Stop Button ஐ அழுத்தி முடித்தவுடன்.

12. Truveo – AOL வழங்கும் ஒரு சேவை இது. காணொளிகளுக்கான ஒரு தேடுபொறி (search engine). பல்வேறு காணொளித் தளங்களில் இருந்து வீடியோக்களைத் தேடி ஓரிடத்தில் பகிர்கிறது.

13. Iterasi– இணையப் பக்கங்கள் (pages) அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகின்றன. உங்கள் மனம் கவர்ந்த தளங்களின் பக்கங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காணாமலோ / காலாவதியாகியோ(expire) விடலாம். ஒரே Clickல் இணையப் பக்கங்களைக் Copy செய்ய உதவுகிறது. உங்கள் மனம் கவர்ந்த இணையத்தளமே (Favorite site) செயலிழந்துவிட்டாலும் அதில் இருந்த தகவல்களை உங்கள் கணினி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலும்.

14. Spypig – நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை உங்கள் நண்பர் எப்போது எத்தனை மணிக்குத் திறந்து பார்த்தார் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். Yahoo, Gmail, Thunderbird, Outlook போன்றவற்றுடன் ஒத்திசைவு (Compatible) கொண்டது.

15. Wakoopa – முதியவர்கள், குழந்தைகள், வீட்டு விலங்குகள், பெண்களுக்கான சமூகக் குழுமங்களைப் போன்றது இது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால்,இது ஒரு மென்பொருட்களுக்கான சமூகக் குழுமம். இணையச் சேவைகள், இணையப் பயன்பாடுகள், மென்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்கள் மற்றும் அவற்றிற்கான மாற்றுகள் ஆகியவற்றையும் தெரிவிக்கிறது.

No comments: