Thursday, November 20, 2008

ப்ஹீமா - ஒரு அழகிய பாட்டு ...

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

..>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

..> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

.>>

சரணம் 1 :

>> இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.

> இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

>> உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..

> கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

>> சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.

>

----------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> சரணம் 2 :

>> மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..

> இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.

>> இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

> நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

>> உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

------------------

>> எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..

> எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

>> நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே

> வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

>ஒ...

Monday, November 10, 2008

அழகே நீ மதுரையா ???

வைகை அறு



திருபரம்குன்றம்



அழகர் கோவில்



காந்தி மண்டபம்



மதுரை இரவு நேரத்தில்



திருமலை நாயகர் மகால்


மீனாக்ஷி கோவில் கோபுர தரிசனம்



தெபகுளம்


Tamarai kulam in Meenakshi Temple

முதல் ரயில் ..


தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்

விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.

ஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்!) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.

சென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.

அதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்

வீட்டில் இருப்பதென்னவோ
வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிதான்.
மின்சாரம் இல்லாததால் அது
கறுப்பாகவே இருக்கிறது.

அம்மாக்கள் அனைவரும்
எந்த பயமும் இல்லாமல்
கொடிக்கம்பிக்கு பதிலாக
மின்சாரக்கம்பியிலேயே
துணி காயப்போடுகிறார்கள்.


சங்ககாலம் பொற்காலம்
எல்லாம் அந்தக்காலம்
வெளிச்சமில்லாமல்
வகுப்புகளெல்லாம்
வீதிக்கு வந்துவிட்டதே
இதுதான் இருண்டகாலம்.


இன்றையதேதியில்
அஜீத், விஜய்யை விட
மின்சாரத்தடைக்குத்தான்
விசிறிகள் அதிகமாக இருக்கின்றது.


வ.உ.சி. கப்பல்களை
ஒட விட்டார்.
இன்று வ.உ.சி.வீட்டில்கூட
மிக்சி, க்ரைண்டர்
எதுவுமே ஓடுவதில்லை.

குழந்தைகளின்
பிறப்பைத் தடுப்பது
கருத்தடை.
குழந்தைகளின்
சிரிப்பைத் தடுப்பது
மின்தடை.

அதிகாரிகளே...
சீக்கிரம்
எங்கள் வீடுகளுக்கு
சிம்னி விளக்காவது தாருங்கள்.
அதற்கும் பட்ஜெட் போதவில்லையென்றால்
சிக்கிமுக்கி கற்களையாவது தாருங்கள்.


மின்சாரத்தடை
முதிர்கன்னியாய்
இருந்த மெழுகுவர்த்திகளுக்கு
முகூர்த்தம் கொடுத்திருக்கிறது.



சபாஷ் ராஜ்மோகன்.

அருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.

விஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.


குழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று
குடங்களைச் சுமந்து அலைவது ஏனோ



பனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு
மண்குடம் உடைக்க தண்ணீர் உண்டா?


என்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..

காவிரிப்பிரச்னை
காவிரிப்ப்ரச்னை
இப்படிப் பேசிப்பேசியே
வறண்டுபோகும் நாக்கு.



எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன்